kavi meenu

kavi meenu kavi meenu

கடலைப்பருப்பு உருண்டை குழம்புதேவையான பொருட்கள் :கடலைப்பருப்பு - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1சின்ன வெங்காயம் - 10தக்காள...
25/07/2026

கடலைப்பருப்பு உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2 (சிறியது)
தேங்காய் - 50 கிராம்
பூண்டு - 5
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு -1 ஸ்பூன்
புளி கரைசல் - நெல்லிக்காய் அளவு
குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிக்சி ஜாரில் 1 மணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பு காய்ந்த் மிளகாய் 3 பல் பூண்டு தேங்காய் சிறிதளவு சோம்பு 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்

அரைத்த மாவுடன் பெரிய வெங்காயம் 1 சேர்த்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதங்கி வரவும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு குழம்பு மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு சேர்த்து கொதித்து வரவும் உருண்டையை போட்டு அடுப்பை குறைவாக வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

பின்பு உருண்டை வெந்து வரவும் தேங்காய் பால் சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும், இப்பொழுது சுவையான உருண்டை குழம்பு ரெடி...

இந்த மாதிரி பயனுள்ள தகவலுக்கு என்னுடைய பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க நன்றி....

தோசை tips
23/07/2026

தோசை tips

வெண்டைக்காய் கார குழம்பு
23/07/2026

வெண்டைக்காய் கார குழம்பு

18/07/2026
கருவாட்டு குழம்பு
13/07/2026

கருவாட்டு குழம்பு

Potato cutlet
10/07/2026

Potato cutlet

10/07/2026
பாகற்காய் கிரேவி தேவையான பொருட்கள்:பாகற்காய் - 1 ( பெரியது)சின்ன வெங்காயம் - 10தக்காளி - 1 புளி - நெல்லிக்காய் அளவு மிளக...
10/07/2026

பாகற்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 1 ( பெரியது)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
குழம்பு தூள் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

✍️ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பாகற்காய் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

✍️மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து
பின்பு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

✍️வதங்கியவுடன் மிளகாய் தூள், மல்லி தூள், குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

✍️நன்றாக கொதித்து வரவும் வதக்கிய பாகற்காய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

✍️ அடுப்பை குறைவாக வைத்து வேக வைத்து, எண்ணெய் பிரிந்து வரவும் இறக்கி விடவும்.

✍️இப்படி டிரை பண்ணி பாருங்க சுவை நன்றாக இருக்கும்..

✍️மேலும் தகவலுக்கு என்னுடைய பக்கத்தை பின் தொடர்ந்து சப்போர்ட்
பண்ணுங்க.நன்றி....

Bitter gourd gravy😋
09/07/2026

Bitter gourd gravy😋

White rice 🍚 kovakkaai poriyal
09/07/2026

White rice 🍚 kovakkaai poriyal

Address

Sivakasi
Sivakasi

Alerts

Be the first to know and let us send you an email when kavi meenu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share