Virundhombal

Virundhombal Virundhombal means serving food with hospitality surcharged with true devotion and love.

Kitchen Queen of Chennai – 2012
Food Blogger – 2017
Virundhombal Foods – 2022
Traditional homemade food | Fresh batches only
Homemade powders | Health mixes | Traditional specials
No bulk production • Prepared after orders
Quality over quantity – always

Tiffin Sambar
25/04/2026

Tiffin Sambar

Quick Tiffin Sambar - Side Dish for Idli, Dosa and Ven Pongal - Sambar without Tamarind Quick tiffin sambar recipe with moong dal, toor dal

Jowar Flour Kozhukattai
21/04/2026

Jowar Flour Kozhukattai

Healthy Jowar Kozhukattai recipe with rice rava – a soft, steamed millet tiffin perfect for breakfast or dinner. Easy to make, gluten-free, and packed

மாங்காய் ஊறுகாய் தேவையான பொருட்கள்மாங்காய் - 2மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்கடுகு உளுந்து - 1 ...
18/04/2026

மாங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

மாங்காய் - 2
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிய துண்டு
நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. மாங்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய மாங்காய் துண்டுகளை ஒரு அகலமான பவுலில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

2. வாணலியை சூடாக்கி வெந்தயம் மற்றும் பெருங்காயத்தை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

3. கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூட்டை குறைத்து மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்த உடன் கலந்து வைத்துள்ள மாங்காய் கலவையை சேர்த்து பிரட்டி 2 நிமிடங்கள் கிளறவும்.

4. கடைசியாக வறுத்து பொடித்த வெந்தயம் பெருங்காயம் கலவையை சேர்த்து கலந்து‌ அடுப்பை அணைக்கவும். ஊறுகாய் ஆறியதும் பீங்கான் கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். சுலபமான உடனடி மாங்காய் ஊறுகாய் தயார்.

ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு (சர்க்கரை இல்லாமல்)தேவையான பொருட்கள்வெள்ளை எள் – 1/2 கப்பாதாம் – 1/2 கப்முந்திரி – 1/2 கப்பூசணி வித...
15/04/2026

ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு (சர்க்கரை இல்லாமல்)

தேவையான பொருட்கள்

வெள்ளை எள் – 1/2 கப்
பாதாம் – 1/2 கப்
முந்திரி – 1/2 கப்
பூசணி விதை – 1/4 கப்
உலர் திராட்சை – 1/4 கப்
பேரிச்சம்பழம் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

1. கனமான கடாயை சூடாக்கி வெள்ளை எள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

2. பாதாம், முந்திரி, பூசணி விதை தனித்தனியாக வறுக்கவும்.

3. கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் & உலர் திராட்சை லேசாக வறுக்கவும்.

4. பின் வறுத்த எள்ளு, முந்திரி, பாதாம் மற்றும் பூசணி விதைகளை சேர்த்து மிக்ஸியில் சேர்த்து விப்பர் மோடில் கொர கொரப்பாக பொடிக்கவும்.

5. பின் அதில் வறுத்த பேரிச்சம்பழம், திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் விப்பர் மோடில் அரைத்துக் கொள்ளவும்.

6. அரைத்த கலவையை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும். கைகளில் சிறிது நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். ஆரோக்கியமான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு தயார்.

பனீர் மசாலா தேவையான பொருட்கள்பனீர் - 200 கிராம்வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 1தக்காளி - 4இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்...
10/04/2026

பனீர் மசாலா

தேவையான பொருட்கள்

பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

2. முந்திரியையும் தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.

3. கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

4. பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

5. அவை லேசாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

6. அவை நன்றாக சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

7. தக்காளி விழுது கெட்டியாக மாறும் போது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

8. பின் கரம்மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.

9. முந்திரி விழுது தக்காளி கலவையோடு நன்கு சேர்ந்து வந்ததும் உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

10. இப்போது சூட்டை குறைத்து காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதி வந்ததும் இறக்கவும்.‌

ஈஸியான சுலபமான பனீர் மசாலா தயார்.

தக்காளி தொக்கு தேவையான பொருட்கள் தக்காளி - 750 கிராம் புளி - 25 கிராம் பூண்டு பற்கள் - 15 - 20 (இடித்தது)மஞ்சள்தூள் - 1/...
31/03/2026

தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்

தக்காளி - 750 கிராம்
புளி - 25 கிராம்
பூண்டு பற்கள் - 15 - 20 (இடித்தது)
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2.5 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப் + 1/2 கப்
கல் உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

1. தக்காளியை நன்றாக கழுவி ஒரு வெள்ளைத் துணியால் ஈரம் ஏதுமில்லாமல் துடைத்துக் கொள்ளவும். பின் நடுவில் இருக்கும் கனமான தண்டு பகுதியை கத்தி வைத்து பிரித்துக் கொள்ளவும்.

2. வாணலியியை சூடாக்கி வெந்தயம் சேர்த்து சிவந்ததும் கடுகு சேர்த்து பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

3. கனமான கடாயில் 1/4 கப் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் தக்காளியை அப்படியே வைக்கவும். மிதமான சூட்டில் திருப்பி விட்டு திரும்பி விட்டு வதக்கவும். தக்காளியின் தோல் நிறம் மாறி மெல்ல சுருங்கி வரும் வரை வதக்கவும். பின் ஒரு எண்ணெய் வடியும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

4. அதே கடாயில் புளியை சேர்த்து சில நிமிடங்கள் குறைந்த சூட்டில் கருகிடாமல் வறுத்துக்கொள்ளவும். பின் அதே எண்ணெய் வடியும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

5. வதக்கிய பொருட்களை நன்றாக ஆறவைத்துக் கொள்ளவும்.

6. அகலமான மிக்ஸி ஜாரில் முதலில் கல் உப்பு மற்றும் வறுத்த புளியை சேர்த்து அரைக்கவும். பின் வதக்கிய தக்காளியை சேர்த்து நைஸாக அரைக்கவும்.

7. இப்போது மற்றொரு கனமான கடாயில் 1/2 கப் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். பின் இடித்த பூண்டை சேர்த்து கைவிடாமல் வதக்கவும்.

8. பின் அரைத்த தக்காளி புளி விழுதை சேர்த்து கிளறவும். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம்.

9. இப்போது மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

10. தொக்கு சிறிது கெட்டியாகும் ஆரம்பிக்கும் போது வறுத்து பொடித்த வெந்தய கடுகு பொடி, பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். தொக்கு சில நிமிடங்கள் கொதிக்கும் போது வெளியே தெரிக்கும். நடுவே கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.

11. தொக்கு சிறிது கெட்டியாகும் போது ஓரங்களில் லேசாக எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். பின் ஒருமுறை நன்றாக கிளறி அதன் சூட்டிலேயே ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

12. 3 மணி நேரத்திற்கு பின் தொக்கு நன்றாக ஆறியதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் மாற்றிக் கொள்ளவும்.

குறிப்பு

1. தக்காளி, புளி வைத்து செய்யும் தொக்கு வகைகளை இரும்பு கடாயில் செய்ய‌ கூடாது.
2. வதக்கிய தக்காளியை அரைக்கும் போது தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம்.

28/03/2026

Broccoli Carrot Peanut Salad - ப்ரோக்கோலி கேரட் வேர்க்கடலை சாலட்

25/03/2026
25/03/2026

Light Evening Snack | Soft & Tasty Jowar Kozhukattai
வெள்ளை சோள மாவு கொழுக்கட்டை




21/03/2026

Sugar-Free Dry Fruits & Seeds Ladoo

Address

Tenkasi

Website

http://virundhombal.wordpress.com/, https://www.vikatan.com/author/muttulttcumi-maatvkirus

Alerts

Be the first to know and let us send you an email when Virundhombal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Virundhombal:

Share