Rudra Pooja Mart

Rudra Pooja Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rudra Pooja Mart, Arts & Crafts Store, agrakaram, Aduthurai.

எங்களிடம் தரமான நவரத்தின ராசிக்கல் பஞ்சலோக மோதிரங்கள் கிடைக்கும் தொடர்புக்கு 094880 15994
29/03/2023

எங்களிடம் தரமான நவரத்தின ராசிக்கல் பஞ்சலோக மோதிரங்கள் கிடைக்கும் தொடர்புக்கு 094880 15994

உங்கள் வீட்டில் வலம்புரிச் சங்கு; வாசம் செய்கிறாள்  மகாலக்ஷ்மி! குபேர யோகம் தரும் வலம்புரிச்சங்கு! கார்த்திகை மாதம் என்ப...
27/11/2022

உங்கள் வீட்டில் வலம்புரிச் சங்கு; வாசம் செய்கிறாள் மகாலக்ஷ்மி! குபேர யோகம் தரும் வலம்புரிச்சங்கு!
கார்த்திகை மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்வது வழக்கம்.

சங்கு குறித்தும் கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமை) சிவபெருமானுக்கு செய்யப்படும் சங்காபிஷேகம் பற்றியெல்லாம் சாஸ்திரங்களும் ஞானநூல்களும் விளக்கியுள்ளன.



ஆன்மிகத்திலும் வழிபாடுகளிலும் பூஜைகளிலும் சங்கு என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆச்சார்யர்கள் விளக்கியுள்ளனர்.

எந்த வலம்புரிச்சங்கு பூஜையறையிலோ இல்லத்தை அலங்கரிக்கவோ வைக்கப்பட்டிருக்கிறதோ... அந்த வீட்டில் குபேர கடாட்சம் நிறைந்திருக்கும், மகாலக்ஷ்மியின் பேரருள் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.



கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு ஒரு ஓடு போல் உருவாகி வருவதே சங்கு எனப்படுகிறது. குபேரனின் அருளையும் குபேர யோகத்தையும் ஒருசேரப் பெற்றுத்தரும் புனிதத்தன்மை சங்குக்கு உண்டு என்கின்றன ஞானநூல்கள்.

வலம்புரிச் சங்கில் கொஞ்சம் தீர்த்தமும் துளசியும் இட்டு பூஜை சங்கு பூஜை செய்து வந்தால், முன்னோர் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் முதலானவற்றில் இருந்து விடுபடலாம். இதையே ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லக்ஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று தர்ம சாஸ்திரம் விளக்குகிறது.

அதேபோல, சுவாமிக்கு சங்கு கொண்டு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இல்லத்தில் உள்ள திருஷ்டி அனைத்தும் நீங்கிவிடும். இதுவரை வீட்டில் இருந்த கஷ்டங்கள், கடன் தொல்லைகள் யாவும் நீங்கிவிடும். தனம் தானியம் பெருகும்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஸ்து தோஷம் உள்ள வீட்டில், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இல்லாத வீடுகளில், தம்பதி இடையே பிணக்குகள் இருக்கிற குடும்பங்களில் துளசியையும் தீர்த்தத்தையும் சங்கில் வைத்து அந்தத் தீர்த்தத்தை, வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் வீடு முழுக்க தெளித்து வருவதும் வாஸ்து பகவானுக்கு உரிய வாஸ்து நாளில் தெளித்து வருவதும் தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளும். துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். சங்கில்... வலம்புரிச்சங்கில், மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.அங்காரக வழிபாடு மிக மிக வலிமையானது. சக்தி வாய்ந்தது. செவ்வாய் தோஷம் போக்கக்கூடியது. செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கு அங்காரகனுக்கு வலம்புரிச்சங்கு கொண்டு பாலபிஷேகம் செய்து வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கும். விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

சங்கு கொண்டு இறைத் திருமேனிக்கு அபிஷேகிப்பது மகா உன்னதமான பலன்களை வழங்கும். அதேவேளையில், சங்குக்கு அபிஷேகம் செய்வதும் பூக்களிட்டு வணங்குவதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். கடன் சுமையால் தத்தளித்துக் கலங்குபவர்கள், பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமத்தால் அர்ச்சித்து பூஜை செய்யலாம். பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். இதனால் கடன் தொல்லைகளும் பிரச்சினைகளும் முற்றிலும் விலகும். பொருட்சேர்க்கை நிகழும். சகல ஐஸ்வரியங்கலும் இல்லத்தில் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வலம்புரிச்சங்கு மட்டுமின்றி வலம்புரிசங்குக் கோலமும் கூட விசேஷம்தான். மகத்துவம் நிறைந்ததுதான். வாசலில் பதினாறு வலம்புரிச்சங்குக் கோலமிட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாகும்.

வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள் ஏவல்கள், தீயவினைகள் நெருங்காது. துர்தேவதைகள் விலகி ஓடுவார்கள்.

பொதுவாக ஒரு தெய்வத்துக்கு அபிஷேகம் செய்தால் கிடைக்கும் புண்ணிய நற்பலன்களை விட சங்கு கொண்டு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தால், பத்து மடங்கு அபிஷேகப் பலன்கள் கிடைக்கப் பெறும் என விளக்குகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இல்லத்துப் பூஜையறையில், சிறிய தட்டில் அரிசியிட்டு, அதில் சங்கு வைத்து, அந்த சங்கிற்கு பூ அலங்கரித்து சந்தன குங்குமமிட்டு பூஜித்து வந்தால், இல்லத்தில் தானியப் பஞ்சமே இருக்காது. உணவுப் பற்றாக்குறையே இருக்காது. மேலும் தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

கருங்காலி மாலை பயன்கள்:கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தி...
27/11/2022

கருங்காலி மாலை பயன்கள்:
கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து அணிந்து பயன்படுத்துவதால் எடுத்த காரியம் சித்தி பெற்று, தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும், மன அமைதி ஏற்படும், பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் பகவான் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் கிடைக்கும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் திருமண தடைநீங்கி திருமணம் கைகூடும். ஆண் பெண் என இருபாலரும் இந்த கருங்காலி மாலையை அணியலாம். இந்த மாலையை கொண்டு தியானம் செய்யவும், மந்திரங்கள் ஜெபிக்கவும் உபயோகிக்கலாம், கடவுள் சிலைகளுக்கு மாலையாகவும் அணிவிக்கலாம்.
கருங்காலி மாலை அணியும் முறை:
கருங்காலி மாலையை முதலில் பாலில் ஒருமுறை கழுவி விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு, நல்ல நேரத்தில் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வேண்டி வணங்கி அணிந்து கொள்ளலாம்.

108 லட்சுமி குபேரன் காசு கிடைக்கும் தொடர்புக்கு 094880 15994
23/11/2022

108 லட்சுமி குபேரன் காசு கிடைக்கும் தொடர்புக்கு 094880 15994

மரகத விநாயகர் வழிபாட்டின் சிறப்பு :--------------------------------------------------------மரகதம் புதனுக்கு உரிய ரத்தினம...
19/11/2022

மரகத விநாயகர் வழிபாட்டின் சிறப்பு :
--------------------------------------------------------

மரகதம் புதனுக்கு உரிய ரத்தினமாகும் , லிங்கம் , விநாயகர் போன்ற வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

சிலைகள் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் சிலைகளை வடிவமைத்தனர். மன்னர்கள் இந்த வகை சிலைகள் கோவிலில் வைத்து வழிபடுவதையே சிறப்பு என்று கருதினார்கள்

மரகத விநாயகராய் வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத விநாயகர் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத விநாயகரை வணங்கலாம்.
மரகத விநாயகர் 1"/2"/3"/4" ஆகிய அளவுகளில் கிடைக்கின்றன தொடர்புக்கு +91 94880 094880 15994

நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் ...
19/11/2022

நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கத்தை நாம் வணங்கி வர நம் மனக்குறைகள் நீங்கி நாம் நினைத்த வரத்தைப் பெறலாம்.

மரக லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதவியைத் தரக்கூடிய யோகத்தைப் பெறலாம். அதோடு நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த உயரத்தை அடையலாம். அத்துடன் நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை.

மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது.இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வாழிபாடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரகத லிங்கம் 1"/2"/3" அளவுகளில் கிடைக்கும் தொடர்புக்கு 094880 15994

💥💥 Karungali Malai 6mm, 8mm & 810mm Bead Size, Unpolished Natural Finish, No Artificial Colour, Original Wood Colour,100...
11/11/2022

💥💥 Karungali Malai 6mm, 8mm & 810mm Bead Size, Unpolished Natural Finish, No Artificial Colour, Original Wood Colour,100 % pure Beads of Black Ebony Wood.

108 Beads, Bead Size - 6mm, Weight : 30g Height - 11.5 Inches
108 Beads, Bead Size - 8mm, Weight : 37g Height - 15.5 Inches
108 Beads, Bead Size - 10mm, Weight : 64g Height - 19.5 Inches

வேல் வழிபாட்டின் மகத்துவம்:முருகப்பெருமானின் வேல் வழிபாடு தொன்மை வாய்ந்தது, நம்முடைய முன்னோர்கள் வீட்டிலேயே வேலை வைத்து ...
08/11/2022

வேல் வழிபாட்டின் மகத்துவம்:
முருகப்பெருமானின் வேல் வழிபாடு தொன்மை வாய்ந்தது, நம்முடைய முன்னோர்கள் வீட்டிலேயே வேலை வைத்து வணங்கி வந்தனர். முருகப்பெருமானின் வேல் ஞானம் மற்றும் வீரத்தை குறிக்கும் ஒரு புனிதமான சின்னம், வேல் வழிபாடு நமது தீவினைகளையும், தீய குணங்களையும் அழித்து நம்மை செம்மைப்படுத்துகிறது.
வேல் வழிபாட்டின் பலன்கள்:
முருகப்பெருமானின் வேலை வழிபாடு செய்வதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும், குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட்டு நிம்மதி பெருகும், செய்யும் காரியங்களில் தடைகள் விலகி வெற்றி கிட்டும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும், நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் கைகூடும், வியாபாரம் மற்றும் செய்தொழில் விருத்தி அடையும், சொந்தமாய் வீடு, நிலம் வாங்குவதில் உள்ள தடைகள் நீங்கும், தடைபட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும், நவகிரகங்க தோஷங்கள் நீங்கும், மன பயம் நீங்கி வலிமை உண்டாகும், எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்கும்.
வேல் வழிபாட்டினை வீட்டில்/ தொழில் செய்யும் இடங்களில் செய்யலாமா?:
வேலை நாம் வீட்டில்/ தொழில் செய்யும் இடங்களில் வைத்து தாராளமாக வைத்து பூஜித்து வழிபடலாம். விக்கிரகங்களை வவைத்து வழிபடுவது போன்ற நியதி எல்லாம் வேல் வழிபாட்டிற்கு கிடையாது. எனவே அச்சம் இன்றி பூஜை அறையில் வேலை வைத்து வணங்கி வரலாம். ஒரு அடி, அரை அடி, மற்றும் அதற்கும் சிறிய அளவில் கூட வாங்கி வைத்து பூஜிக்கலாம். இந்த வேல் ஐம்பொன்னாலோ, வெள்ளி, பித்தனை, செம்பு ஆகிய உலோகத்தாலோ அல்லது கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்.
கருங்காலி வேல் வழிபாடு செய்யும் முறை:
கருங்காலி வேலை முதலில் பாலில் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு நன்கு காய்ந்த பின்னர், ஒரு தூய்மையான துணி கொண்டு துடைத்து விட்டு, ஒரு நல்ல நேரத்தில் பூஜை அறையில் ஒரு பித்தளை அல்லது செம்பு தாம்பாளத்தில் நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை குமித்து வைத்து கருங்காலி வேலை அதில் ஊன்றி வைக்க வேண்டும். பித்தளை அல்லது செம்பு தாம்பாளம் இல்லை என்றால் வெள்ளை அல்லது மஞ்சள் நிற துணியில் வைக்கலாம், வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து காயவைத்து அதில் கூட நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை குமித்து வைத்து வேலை ஊன்றி வைக்கலாம்.
தினமும் நாம் சாமி கும்பிடும்போது கருங்காலி வேலுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மலர்களால் அலங்கரித்து, முருக பெருமானுக்கு உரிய மந்திரங்கள், உரிய பாடல்கள், 108 போற்றி அல்லது கந்தசஷ்டி கவசம் படித்து, தூப தீப ஆர்த்தி காட்டி வணங்கி வழிபட்டால் போதுமானது. அபிஷேகம் தேவை இல்லை, நைவேத்தியம் கட்டாயம் இல்லை. மாதாந்திர சஷ்டி அன்று தாம்பாளத்தில் உள்ள நாட்டு மாட்டு திருநீறு அல்லது பச்சரிசியை மாற்றி புதிய திருநீறு அல்லது பச்சரிசியை வைக்கலாம், ஏற்கனவே வைத்திருந்த திருநீறை பத்திரப்படுத்தி நாம் தினமும் பூசிகொள்ளலாம், பச்சரிசியை சைவ உணவு சமைப்பதற்கு உபயோகிக்கலாம்.
3"/6"/9" அளவில் கிடைக்கும் தொடர்புக்கு 9488015994

தரமான கருங்காலி மாலைகள். காப்பு, விநாயகர், லிங்கம், சூலம்.வேல். தாயத்து மற்றும் கருங்காலி கட்டைகள் கிடைக்கும் தொடர்புக்க...
07/11/2022

தரமான கருங்காலி மாலைகள். காப்பு, விநாயகர், லிங்கம், சூலம்.வேல். தாயத்து மற்றும் கருங்காலி கட்டைகள் கிடைக்கும் தொடர்புக்கு 9488015994

Address

Agrakaram
Aduthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rudra Pooja Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share