Kumari village cooking

Kumari village cooking In this channel fully entertainment and kumari village style cooking watch my all videos and enjoy

🦋🦋உளுந்து சட்னி !! 🔴தேவையான பொருட்கள் :அரைக்க தேவையானவை :✍️வெள்ளை உளுந்து - 1/2 கப்✍️துருவிய தேங்காய் - சிறிதளவு✍️வரமிளக...
29/07/2025

🦋🦋உளுந்து சட்னி !!
🔴தேவையான பொருட்கள் :
அரைக்க தேவையானவை :
✍️வெள்ளை உளுந்து - 1/2 கப்
✍️துருவிய தேங்காய் - சிறிதளவு
✍️வரமிளகாய் - 2
✍️புளி - சிறிதளவு
✍️எண்ணெய் - சிறிதளவு
✍️உப்பு - தேவையான அளவு

🔴தாளிக்க தேவையானவை :

✍️எண்ணெய் - 1 டீஸ்பூன்
✍️கடுகு - 1/4 டீஸ்பூன்
✍️உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
✍️கறிவேப்பிலை - சிறிதளவு

🔴செய்முறை :

✍️முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெள்ளை உளுந்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

✍️பின்னர் அதனுடன் வரமிளகாய், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.

✍️வதக்கிய அனைத்தும் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

✍️அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

✍️பின்னர் இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கலந்தால் சுவையான உளுந்து சட்னி ரெடி.

🦋🦋தக்காளி சட்னி!!

🔴தேவையான பொருட்கள்:
✍️பழுத்த நாட்டு தக்காளி - 4
✍️பெரிய வெங்காயம் - 1
✍️வரமிளகாய் - 3
✍️காஷ்மீர் மிளகாய் - 3
✍️பூண்டு - 5 பல்
✍️புளி - சிறிதளவு
✍️வெல்லம் - சிறிதளவு
✍️உப்பு - தேவையான அளவு
✍️கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
✍️நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
✍️கடுகு - 1 ஸ்பூன்
✍️கறிவேப்பிலை - சிறிதளவு

🔴செய்முறை விளக்கம்:

✍️ஒரு பாத்திரத்தில் பாதி எண்ணெயை சூடாக்கவும். அதன்பின் கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், புளி ஆகியவற்றை நன்கு வதக்கவும்.

✍️இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 3-4 நிமிடங்கள் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

✍️இதில் உப்பு சேர்த்து வதக்கவும் இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் 3-4 நிமிடங்கள் தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

✍️இந்த கலவையை ஆற வைக்கவும். வதக்கிய மிளகாய், பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.பின்னர் வெங்காயம், பூண்டு கலவையை சேர்த்து மீண்டும் சில நொடிகள் அரைக்கவும்.

✍️இப்போது வதக்கிய தக்காளி மற்றும் வெல்லத்தை சேர்த்து அதில் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

✍️இப்போது மீதமுள்ள எண்ணெயை தாளிக்க பயன்படுத்தவும். எண்ணெயை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும் .இப்போது சுவையான காரைக்குடி தக்காளி சட்னி ரெடி.

🦋🦋வெங்காய சட்னி !!
🔴தேவையான பொருட்கள் :

✍️சின்ன வெங்காயம் - 20
✍️வரமிளகாய் - 5
✍️பூண்டு - 5
✍️புளி - சிறிதளவு
✍️கடுகு - 1/2 ஸ்பூன்
✍️உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
✍️கறிவேப்பிலை - சிறிதளவு
✍️கொத்தமல்லி - சிறிதளவு
✍️உப்பு - தேவையான அளவு
✍️எண்ணெய் - தேவையான அளவு
✍️தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

🔴ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

✍️அதன் பிறகு அதில் வரமிளகை புளி போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி, ஆற வைக்கவும்.

✍️அவை ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த இதனை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

✍️இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் அதை அரைத்த வெங்காயம் சட்னியில் சேர்த்து, கிளறிவிடவும். அவ்வளவு தான் ருசியான தக்காளி சட்னி தயார்!!

🦋🦋கருவேப்பிலை சட்னி !!
🔴தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...
✍️கறிவேப்பிலை - 1/2 கப்
✍️தேங்காய் - 1/4 கப்
✍️உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
✍️கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
✍️பச்சை மிளகாய் - 1
✍️புளி - 1 சிறிய துண்டு
✍️உப்பு - சுவைக்கேற்ப தாளிப்பதற்கு
✍️எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
✍️கடுகு - 1/2 டீஸ்பூன்
✍️பெருங்காயத் தூள் - 1 சிறிய சிட்டிகை

🔴செய்முறை:

✍️முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் புளியை சேர்த்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

✍️பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

✍️பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், வறுத்த பருப்புகள், புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

✍️பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்தால், கறிவேப்பிலை சட்னி தயார்.

🦋🦋புதினா சட்னி !!
தேவையான பொருட்கள்:

✍️புதினா - 2 கைபிடி
✍️கடலைப்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
✍️வரமிளகாய் - 3
✍️பெரிய வெங்காயம் - 1
✍️பச்சை மிளகாய் - 2
✍️தக்காளி - 1
✍️பூண்டு - 3
✍️புளி - சிறிதளவு
✍️தேங்காய் - 1/4 கப் (துருவியது)
✍️கடுகு - 1/2 ஸ்பூன்
✍️உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
✍️கறிவேப்பிலை - சிறிதளவு
✍️உப்பு - சுவைக்கு ஏற்ப
✍️எண்ணெய் - தேவையான அளவு
✍️தண்ணீர் - தேவையான அளவு
🔴செய்முறை விளக்கம்:

✍️ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

✍️பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும், அதில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளும் சேர்த்து நன்கு வதக்கவும்.

✍️பிறகு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் புளி மற்றும் புதினாவை சேர்த்து சுமார் ஒரு நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். இப்போது இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.

✍️அவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். இதனுடன் துருவிய தேங்காய் சுவை கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்

✍️இப்போது சட்டினியை ஒரு பவுலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

✍️பிறகு தாளித்த இதனை சட்னியுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.டேஸ்டான புதினா சட்னி ரெடி.

🦋🦋தேங்காய் சட்னி !!
🔴தேவையான பொருட்கள்:
✍️தேங்காய் – அரை மூடி
✍️உடைத்த கடலை – அரை கப்
✍️பச்சை மிளகாய் – 2
✍️வர மிளகாய் – 2
✍️சின்ன வெங்காயம் – 4
✍️பூண்டு பல் – 2
✍️இஞ்சி – ஒரு சிறிய துண்டு
✍️கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு ✍️கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு
✍️கல் உப்பு – தேவையான அளவு

🔴தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:

✍️தேங்காய் சட்னி அரைக்க முதலில் தேங்காயை உடைத்து அரை மூடி அளவிற்கு தேங்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

✍️பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகளை போட்டு, அரை கப் அளவிற்கு உடைத்த கடலை சேர்த்து இரண்டு பச்சை மிளகாய்களை மீடியம் சைஸ் அளவிற்கு எடுத்து கீறி சேர்த்துக் கொள்ளுங்கள்.

✍️பின்னர் 2 பூண்டு பல், 2 வர மிளகாய், ஒரே ஒரு துண்டு இஞ்சி மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

✍️பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.

✍️நான்கு சின்ன வெங்காயத்தை உரித்து அதில் இரண்டை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீதி 2 சின்ன வெங்காயம் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

✍️தூள் உப்பை விட கல் உப்பு சேர்ப்பது தேங்காய் சட்னிக்கு ருசியை கூட செய்யும். இப்போது மிக்ஸி ஜார் மூடியை மூடி நன்கு நைஸாக தேங்காய்ச் சட்டினியை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

✍️பின்னர் அதனுடன் தாளிக்க ஒரு கரண்டியை எடுத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் கால் டீஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் சீரகம், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக தாளித்தம் செய்து தேங்காய் சட்னியில் கொட்டவும்.

✍️! மணக்க மணக்க தேங்காய் சட்னி ரெடி!!

🦋🦋ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி !!

✍️1/2மூடி தேங்காய்த் துருவல்
✍️2டீஸ்பூன் வரமிளகாய்த்தூள்
✍️5சின்ன வெங்காயம்
✍️2கொத்து கறிவேப்பிலை
✍️தேவையானஅளவு உப்பு
✍️தாளிக்க ஒரு ஸ்பூன் ஆயில்
✍️1/2 ஸ்பூன் கடுகு
✍️1 ஸ்பூன் கடலை உளுந்து பருப்பு.
✍️1கொத்து கறிவேப்பிலை
✍️4சின்ன வெங்காயம் தட்டியது
✍️1வர மிளகாய்

🔴அரை மூடி தேங்காய் துருவலையும் மிளகாய் தூள் கருவேப்பிலை வெங்காயம் உப்பு அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

🔴கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிதட்டிய சின்ன வெங்காயம் கடுகு உளுந்து கடலைப் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும்..

🔴தாளித்த கலவையை சட்னியில் போட்டு தண்ணீர் விட்டு கலக்கி பரிமாறவும்..

🦋🦋 மதுரை ஸ்டைல் தண்ணீர் சட்னி !!
✍️5 மேஜை கரண்டி பொட்டுக்கடலை
✍️10 பச்சை மிளகாய்
✍️10கறிவேப்பிலை
✍️1.5 மேஜை கரண்டி உப்பு
✍️1/2 லிட்டர் தண்ணீர்
🔴தாளிப்பதற்கு:
✍️3 மேஜைக்கரண்டி எண்ணெய்
✍️1 தேக்கரண்டி கடுகு
✍️1 கொத்து கறிவேப்பிலை
✍️4வர மிளகாய்
✍️5சின்ன வெங்காயம்

✍️ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

✍️தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து கலந்து விடவும். மதுரை தண்ணி சட்னி தயார்.

🦋🦋கடப்பா கார சட்னி !!
✍️பெரிய வெங்காயம் 2
✍️மீடியம் சைஸ் தக்காளி 2
✍️பெரிய பல் பூண்டு 4
✍️புளி நெல்லிக்காய் அளவு
✍️கல் உப்பு ருசிக்கு
✍️சிவப்பு மிளகாய் 6
✍️காஷ்மீரி மிளகாய் 3

🔴தாளிக்க:-
✍️கடுகு 3/4 டீ ஸ்பூன்
✍️சிவப்பு மிளகாய் 3
✍️கறிவேப்பிலை 1 ஆர்க்கு
✍️நல்ல எண்ணெய் 3 1/2 டேபிள் ஸ்பூன்

✍️மிக்ஸி ஜாரில், பூண்டு, புளி, காஷ்மீரி மிளகாய், சி.மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

✍️வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து, அரைக்கவும்.அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.

✍️தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

✍️அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், நல்ல எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, தாளித்ததும், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

✍️வதக்கினதும், தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கி, மேலே, 1 ஸ்பூன் காய்ச்சாத ந.எண்ணெய், கறிவேப்பிலையை போட்டு, அடுப்பை நிறுத்தி விடவும்.

✍️பிறகு நன்கு கலந்து பௌலுக்கு மாற்றவும்.

✍️இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான, கடப்பா காரச் சட்னி தயார்
தோசைக்கு இந்த சட்னி, மிகவும் ஆப்ட்டாக இருக்கும். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

🦋🦋மைசூர் சட்னி!!
✍️வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன்
✍️பெரிய வெங்காயம் 1
✍️பொட்டுக்கடலை 2 டேபிள் ஸ்பூன்
✍️தேங்காய் 1/4 மூடி
✍️பூண்டு 6 பல்
✍️காஷ்மீரி மிளகாய் 4
✍️சிவப்பு மிளகாய் 8
✍️புளி பெரிய நெல்லிக்காய் அளவு
✍️உப்பு ருசிக்கு
✍️கறிவேப்பிலை 1 ஆர்க்கு
✍️நல்ல எண்ணெய் 2 ஸ்பூன்
✍️தண்ணீர் தேவையான அளவு

✍️தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை சற்று பொடியாக நறுக்கவும்.சுடு தண்ணீரில், காஷ்மீரி மிளகாய், சி.மிளகாய், புளியை ஊற வைக்கவும்.

✍️தேங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் 2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், எள்ளை சிறிது வறுக்கவும்.

✍️எள்ளை வறுத்ததும், வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு, வதக்கி, அதனுடன், தேங்காய், பூண்டு, கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன், தேங்காய் துண்டுகள், பொட்டுக்கடலை, ஊறவைத்த, புளி, மிளகாய், உப்பு, சேர்த்து, ஒரு சுற்று சுற்றினதும், சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.

✍️அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,மைசூர் சட்னி தயார். இதற்கு தாளிப்பு தேவையில்லை.

🦋🦋🦋 இது போன்ற தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எனது பக்கத்தினை ஃபாலோ செய்யவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும் நன்றி 🦋🦋🦋🦋

10- வகையான குழம்பு...1. வெந்தயக் குழம்பு (Vendhaya Kuzhambu)பொருட்கள்:வெந்தயம் – 1 tspவெங்காயம் – 1 (நறுக்கியது)பூண்டு –...
28/07/2025

10- வகையான குழம்பு...
1. வெந்தயக் குழம்பு (Vendhaya Kuzhambu)

பொருட்கள்:

வெந்தயம் – 1 tsp

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பூண்டு – 6 பல்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் – 1 tbsp

மஞ்சள் தூள் – ¼ tsp

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 tbsp

கருவேப்பிலை, கடுகு

செய்முறை:

1. எண்ணெயில் வெந்தயம், கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.

2. வெங்காயம், பூண்டு வதக்கி புளிநீர், மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.

3. நன்றாக கொதிக்க விடவும்.

---

2. பருப்பு குழம்பு (Paruppu Kuzhambu)

பொருட்கள்:

துவரம்பருப்பு – ½ கப்

தக்காளி – 1

வெங்காயம் – 1

மஞ்சள் தூள் – ¼ tsp

புளி – சிறிது

உப்பு, தாளிக்க எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:

1. பருப்பு வெந்து விட்டதும் மசித்துக் கொள்ளவும்.

2. புளி நீர், வெங்காயம், தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

3. பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு தாளிக்கவும்.

---

3. புளி குழம்பு (Puli Kuzhambu)

பொருட்கள்:

புளி – எலுமிச்சை அளவு

வெங்காயம் – 10 (சின்ன வெங்காயம்)

பூண்டு – 6 பல்

மிளகாய் தூள் – 1 tbsp

தனியா தூள் – 1 tbsp

மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை

செய்முறை:

1. எண்ணெயில் தாளித்து வெங்காயம், பூண்டு வதக்கவும்.

2. புளிநீர், மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

---

4. தக்காளி குழம்பு (Tomato Kuzhambu)

பொருட்கள்:

தக்காளி – 4

வெங்காயம் – 1

பூண்டு – 5 பல்

மஞ்சள் தூள், மிளகாய் தூள்

உப்பு, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை

செய்முறை:

1. எண்ணெயில் தாளித்து வெங்காயம், பூண்டு வதக்கவும்.

2. தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

3. மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

---

5. கார குழம்பு (Kara Kuzhambu)

பொருட்கள்:

புளி – சிறிது

வெங்காயம் – 1

பூண்டு – 5

மிளகாய் தூள் – 1 tbsp

மஞ்சள் தூள் – ¼ tsp

எண்ணெய் – 2 tbsp

கடுகு, கருவேப்பிலை

செய்முறை:

1. எண்ணெயில் வெங்காயம், பூண்டு வதக்கவும்.

2. புளி நீர், மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

---

6. முருங்கைக்காய் குழம்பு

பொருட்கள்:

முருங்கைக்காய் – 1 (தூள்கள்)

புளி – சிறிது

வெங்காயம் – 1

பூண்டு – 5

மிளகாய் தூள், மஞ்சள் தூள்

உப்பு, எண்ணெய், தாளிக்கவும்

செய்முறை:

1. எண்ணெயில் தாளித்து பொருட்கள் வதக்கவும்.

2. முருங்கைக்காய் சேர்த்து புளி நீரில் வேக விடவும்.

3. மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.

---

7. வெண்டைக்காய் குழம்பு

பொருட்கள்:

வெண்டைக்காய் – 10 துண்டுகள்

புளி – சிறிது

வெங்காயம் – 1

பூண்டு – 4

மசாலா தூள், உப்பு, எண்ணெய், தாளிக்க

செய்முறை:

1. வெண்டைக்காயை தனியாக வதக்கி வைக்கவும்.

2. வெங்காயம், பூண்டு வதக்கி புளி நீர், மசாலா தூள் சேர்க்கவும்.

3. வெண்டைக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

---

8. செட்டிநாடு குழம்பு

பொருட்கள்:

வெங்காயம், பூண்டு

தக்காளி – 1

மிளகு, சோம்பு, கிராம்பு, பட்டை – வறுத்துப் பொடி

புளி – சிறிது

மஞ்சள் தூள், உப்பு

செய்முறை:

1. எண்ணெயில் தாளித்து பொருட்கள் வதக்கவும்.

2. புளி நீர், மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

3. வறுத்த மசாலா தூள் சேர்க்கவும்.

---

9. கடலைக்கறி குழம்பு (Black Chana Kuzhambu)

பொருட்கள்:

கருப்பு கடலை – ½ கப் (நன்கு ஊற வைத்து வேகவைத்தது)

வெங்காயம் – 1

தக்காளி – 1

புளி – சிறிது

மசாலா தூள், உப்பு, எண்ணெய்

செய்முறை:

1. தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கவும்.

2. புளிநீர், மசாலா தூள் சேர்க்கவும்.

3. கடலை சேர்த்து கொதிக்க விடவும்.

---

10. துவையல் குழம்பு (Thuvaiyal Kuzhambu)

பொருட்கள்:

வத்தல் மிளகாய் – 4

சின்ன வெங்காயம் – 6

பூண்டு – 4

புளி – சிறிது

எண்ணெய், உப்பு

கடுகு, உளுந்தம் பருப்பு

செய்முறை:

1. அனைத்து பொருட்களும் வதக்கி அரைத்துத் துவையல் செய்யவும்.

2. அதை புளிநீர் சேர்த்து குழம்பாக செய்து கொதிக்க வைக்கவும்.

3. கடைசியில் தாளித்து பரிமாறவும்.

Address

Melpalai
Kanyakumari
629152

Telephone

+918870790131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumari village cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumari village cooking:

Share