18/02/2025
`கோல்டு பிரியம்’ பெருமையுடன் வழங்கும் பெண்களுக்கான பிரத்யேகமான இந்த வேகநடைப் போட்டியில், 18 வயதிற்கு மேலான அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். 18-30, 31-40, 41-50, 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த நான்கு பிரிவுகளிலும் முதலில் வரும் 50 பேர்கள் என 200 பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.suprememediahouse.com என்ற எங்கள் இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை புரோவிடன்ஸ் மாலில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை போட்டி எண்கள் மற்றும் அதிர்ஷ்டக் கூப்பன் வழங்கக்கப்படும்.
போட்டி நடக்கும் தினமான மார்ச் 9-ம் தேதி அதிகாலை, போட்டி துவங்கும் இடமான உப்பளம் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் 5 மணி முதல் 5.30 மணிக்குள் டி-ஷர்ட் வழங்கப்படும். 6 மணி முதல் 6.30 மணி வரை யோகா பயிற்சிகள் வழங்கப்படும். மிக சரியாக 6.45 மணிக்கு ஒன்றன் பின் ஒன்றாக, ஒவ்வொரு குழுவுக்கும் வேகநடைப் போட்டி தொடங்கும். வேகநடைப் போட்டியின் தூரம் 3 கிலோமீட்டர்.
வழி:
இந்திராகாந்தி உள்விளையாட்டரங்கத்தில் தொடங்கி ரயில்வே நிலையம், இருதய ஆண்டவர் கோயில் வழியாக காந்தி வீதி சின்ன மணிக்கூண்டை அடைந்து, புஸ்ஸி வீதி வழியாக கடற்கரை சாலை வழியாக தீயணைப்பு நிலையம் அடைந்து மீண்டும் உப்பளம் வழியாக புறப்பட்ட இடத்திற்கு வந்தடைய வேண்டும்.
போட்டியில் நடுவர்கள் தேர்வு செய்வதே இறுதியான முடிவு. மேலே கூறியவாறு முதலில் வரும் 200 பேருக்கு பரிசும், அடுத்ததாக வரும் 200 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்படும். போட்டியாளர்களின் புத்துணர்வுக்காக தண்ணீர் பாட்டில், வாழைப்பழம், கொண்டைக்கடலை, பிஸ்கட் போன்றவை இலவசமாக வழங்கப்படும். அதிர்ஷ்டக் கூப்பன் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும் 5 நபர்களுக்கு சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன.
9043101030