மயில் மரச்செக்கு எண்ணெய்.

  • Home
  • மயில் மரச்செக்கு எண்ணெய்.

மயில் மரச்செக்கு எண்ணெய். வாகை மரச்செக்கு எண்ணெய் கிடைக்கும்.

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்த போது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவத...
03/06/2025

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்த போது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பி விடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும் போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒரு முறை மணிஆர்டர் வந்த போது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன்
(my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின்
( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலை பேசியில்
பேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டு
கொண்டேன்.

அப்படியே போனை வைத்து விட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறு நாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக் கொண்டு வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என் போன்றோர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

தாயிடம் நிரூபியுங்கள். கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

தந்தையிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

மனைவியிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

சகோதரனிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

சகோதரியிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

மகனிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

மகளிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் .
அது கடலில் கொட்டிய பெருங்காயமே.

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..
அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..
நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

ஆகவே தோற்று போ,
தோற்று போனாலும் வெற்றி கிடைக்கும்

அன்புடன் வாழுங்கள்!

படித்ததில் பிடித்தது ....

என்றும் அன்புடன்

மயில் மரச்செக்கு எண்ணெய்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:* முதலில் உங்கள் வீட்டிலுள்ள Chemical கலந்த Soaps, Shampoo,Paste, கொசுவர்த்தி, ஊதுபத்தி...
16/01/2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

* முதலில் உங்கள் வீட்டிலுள்ள Chemical கலந்த Soaps, Shampoo,Paste, கொசுவர்த்தி, ஊதுபத்தி, கற்பூரம், Food Color, make up items ...... தூக்கி எரியுங்கள்.

* சூரிய உதயத்துக்கு முன்பு (60 mins) எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு குளியுங்கள். குளிக்கும் நீரில் மஞ்சள், வேப்பிலை, கல் உப்பு சேர்க்கலாம். எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம்.

* தினமும் 2 முறை பல்விலக்கி ( பற்பொடி) oil Pulling செய்யனும்.

*தினமும் அரை மணி நேரம் வியர்வை வர மண்ணில் வேலை செய்வது முக்கியம். மூச்சு பயிற்சி, சூரிய நமஸ்காரம் நல்லது. மாலை நேரத்து சூரிய ஒளியில் இருப்பது நல்லது.

* வாரத்துக்கு 2 முறை எண்ணை குளியல் கட்டாயம் எடுக்கணும்.

* இரவில் நேத்ர ஜோதி தைலத்தை வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது கண்களுக்கு இட வேண்டும் . இரு காதுகளுக்கு சிறிது எண்ணை விடுவது அவசியம். வருடத்தில் இரண்டு தடவை எனிமா எடுக்க வேண்டும் .

* குளிர் சாதன உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும் . மூன்று வேளையும் சூடான உணவையே எடுக்க வேண்டும். தொண்டை பகுதி எப்போதும் கதகதப்பாக இருப்பது அவசியம்.

* வள்ளலாரின் மூக்கூட்டு சூரணத்த காய்ச்சி குடிங்க.

* பசுமஞ்சள், சின்ன வெங்காயம், பூண்டு, தோல் சீவிய தெளிந்த இஞ்சிச்சாறு, நெல்லி, எலுமிச்சை இவை எல்லாவற்றையும் பச்சையாக எடுப்பது மிக மிகசிறப்பு. சிறிது தேன் கலந்தும் எடுக்கலாம். Vitamin - Cயில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டு.

*கருங்குருவை, கருப்புக் கவுனியில் கஞ்சி காய்ச்சி குடிப்பது நலம். தூய மல்லி சாதம், முருங்கை, சுண்டை, பிரண்டை, வேப்பம் பூ, வாழைப்பூ சேர்க்கலாம்.

* செக்கு எண்ணை, பனை கருப்பட்டி , கரும்பு சர்க்கரை பயன்படுத்துவது நல்லது. வெள்ளை சர்க்கரையை, மைதாவை தவிர்ப்பது நல்லது. தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணை(அ) நல்லெண்ணை உள்ளுக்கு எடுப்பது நலம்.

* பசித்தால் மட்டுமே உணவை எடுக்க வேண்டும் . நீங்கள் எடுக்கும் உணவு கட்டாயம் இராசாயனம் கொண்டு விளைந்தாக இருக்கவேகூடாது. பருவத்தில் பயிர் செய்த உணவே சிறந்த உணவு. அரிசி, பருப்பு,காய்கறிகள், கீரைகள், மூலிகைகள்...... முடிந்த வரை உங்கள் உணவை நீங்களே உற்பத்தி செய்யுங்கள்.

* தூய வெற்றிலை, களி பாக்கு, சூளை சுண்ணாம்பு சேர்த்து தினமும் தாம்பூலம் தரிப்பது நன்று.

* சூரிய மறைவுக்கு முன்பே இரவு உணவை முடித்தாக வேண்டும் . தூங்கும் போது சூடு நீரில் காட்டன் துணியை விட்டு பிழித்து பாதத்தில்லிருந்து கால் மூட்டு வரை ஒத்தடம் தரலாம், நம் உடலிலுள்ள வாயு, பித்தம், கபத்தை சமநிலைப்படுத்தும்.

* மாலை நேரத்தில் இலுப்பெண்ணை கொண்டு தீபம் ஏற்றவும்.

* நிலம், நீர், காற்று மாசடைந்த இடத்தில் வாழ கூடாது. ( City Pollution).

*மருந்து, மாத்திரை, ஊசி என்று உங்கள் உடலுக்குள் செலுத்தி Chemical Container ஆக மாற்ற வேண்டாம்ங்க. உடலும், உயிரும் நன்றாக இருக்கும் வரை அதன் அருமை தெரியாது.... வரும் முன் காப்பதே சிறப்பு.

இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு.சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் அரு...
25/12/2024

இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு.

சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் அருகில் அமர்ந்திருந்தப் பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது 'அப்பா' என்று திரையில் வர அந்தப் போனை கட் செய்து கொண்டே இருந்தார்.

"ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார் பேசலாமே" என்று சொன்னேன்.

"சும்மா எங்கிருக்க எங்கிருக்கன்னு கேட்பாருங்க" என பதில் சொன்னார்.

அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது.

"அப்பாவெல்லாம் பேசும் போதே பேசிடனும் பின்னால பேசாமல் விட்டுவிட்டோம்னு வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை" என சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொல்லவில்லை. காரணம் சிலவற்றின் அருமையை இழந்து தான் புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கும். சொன்னால் யாருக்கும் புரியாது.

சென்னையிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் குறைந்தது ஐந்தாறு முறையாவது அப்பாவின் போனிலிருந்து அழைப்பு வந்து விடும்.

"பஸ் ஏறிட்டியா?"

" சாப்டியா?"

"மேல்மருவத்தூர் தாண்டிட்டியா?"

"சிதம்பரம் வந்துட்டியா?"

என ஏதாவது ஒன்றைக் கேட்டு அழைத்துக் கொண்டே இருப்பார்.

"சரிப்பா..வந்துடறேன்ப்பா" என்ற பதிலை ஒவ்வொரு அழைப்பிலும் சொல்லிக் கொண்டிருப்பேன்.

இரவுப் பயணம் செய்தால் பேருந்து விடியற்காலையில் நான்கு மணிக்கு ஊரை நெருங்கும். அந்நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பேன். அதனாலேயே மயிலாடுதுறை வரைக்கும் சென்று டீ குடித்து விட்டு விடிந்ததும் ஊருக்கு பஸ் ஏறுவேன்.

ஆனால் மிகச்சரியாக வைத்தீஸ்வரன் கோயிலைத் தாண்டியதுமே அப்பாவிடம் இருந்து அழைப்பு வரும்.

"எறங்கப் போறியா தம்பிய வரச் சொல்லட்டுமா?" என்று அரைத்தூக்கத்தில் தம்பியை எழுப்பி வண்டியைக் கொடுத்தனுப்புவார்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் பேருந்து ஏறியதுமே அவரும் மனதளவில் என்னோடு பயணம் செய்து கொண்டிருந்தாரோ என்று தோன்றும்.

பகல் நேரப் பயணம் என்றால் இரவு எத்தனை மணியானாலும் நான் வீட்டிற்கு வரும் வரை விழித்திருப்பார்.

பேக்கை கழற்றி வைக்கும் போது துவைத்த லுங்கியைக் கையில் தருவார்.

"சாப்ட்டு படு" என்ற ஒரு ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டுத் தான் படுக்கச் செல்வார்.

மறுநாள் காலை எழுந்து தான் எல்லாவற்றையும் விசாரிப்பார்.

ஆனால் வீட்டிற்கு வந்து அரை நாளிலேயே எங்களுக்குள் ஏதோ ஒரு வாக்குவாதம் தொடங்கி விடும்.

"வரணும் வரணும்னு கூப்பிட்டது இப்படி சண்டை போடுறதுக்குத் தானா?" என்று கேட்பேன்.

"நான் எது சொன்னாலும் நீ மறுத்துப் பேசறியே" என்பார் அப்பா.

அடுத்த சில நிமிடங்களில் எதையாவது பற்றி நானே பேச்சுக் கொடுப்பேன்.

அல்லது அவரே ஏதாவது பேசுவார்.

எந்த சண்டையையும் இருவருமே நீடிக்க விட்டதே கிடையாது.

வாக்குவாதங்கள், சண்டைகள் வெறும் நீர்க்குமிழிகளாகவே எங்களுக்குள் இருந்திருக்கின்றன.

இந்த முறை மயிலாடுதுறையை நெருங்க நெருங்க அப்பாவிடமிருந்து அழைப்பு வருகிறதா என அனிச்சையாக போனை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். என்னையறியாமல் அப்பா என டயலில் டைப் செய்து பின் டெலிட் செய்தேன்.

வீட்டு வாசலில் நின்று "வாப்பா நல்லாருக்கியா?" என்று கேட்கும் அப்பாவின் குரலைக் கேட்க முடியவில்லை.

பூச்சரம் போடப்பட்ட அப்பாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு வீட்டிற்குள் வருவது சொல்ல முடியாத பெருந்துயரம்.

மகன், பெண் பிள்ளைகள் அனைவர்க்கும் இந்தப் பதிவு படித்து உணருங்கள்.....

அப்பாவைத் தவற விடாதீர்கள்...

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

*படித்ததில் பிடித்தது...*🔴

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது.வீட்ட...
01/12/2024

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்
கொண்டிருந்தது.
வளையை விட்டு
மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது.
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்
கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது .
அவர்கள் வெளியே எடுத்தது ............
ஒரு...........எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது.
"கோழி விட்டேற்றியாகச்
சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.
நல்லவேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
"உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.
வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியை
யெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது.
ஆடும் அதேபதிலைச் சொல்லியது.
அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை
"எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.
எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
“ஆ " எனக்கத்தினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக்
கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டுஓடினார்கள்.
விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை.
கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.
கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.
அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்.
வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை.
விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.______________________________
நீதி ::--
அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை நம்முடையதாகவும்இருக்கலாம்.

காட்சி - 1அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான்.விமான நிலையத்திலி...
04/11/2024

காட்சி - 1

அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான்.

விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.

'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்...' என எண்ணியவன், கால் டாக்சியில் கிளம்பினான். 15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது கால்டாக்சி. அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான்.

'ரிங்' போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர்.

''மாமா... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா... போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,'' என்றான்.

''உனக்கு விஷயமே தெரியாதா... உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா...''

''இல்லயே மாமா... என்ன விஷயம்?''

''உனக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கு. உங்க அப்பாவும், அம்மாவும், முதியோர் இல்லத்துல இருக்காங்க; யாராவது வந்தா கொடுக்கச் சொல்லி அட்ரஸ் கொடுத்திருக்காரு உங்கப்பா; இரு எடுத்துட்டு வர்றேன்,'' என்று சொல்லியபடியே உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தார்.

'இவங்களுக்கு என்னாச்சு... எல்லா வசதிகளும் நிறைஞ்ச அபார்ட்மென்ட் இருக்கயில ஏன் முதியோர் இல்லத்தில போய் தங்கணும்...' என்று குழம்பிப் போனான்.

''தேங்க்ஸ் மாமா... நான் வரேன்,'' என்று சொல்லி கிளம்பினான்.

அதுவரை மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவி ப்ரீதி, ''என்னாச்சு தீபக்?'' என்று கேட்டாள்.
''என்னத்த சொல்ல... முதியோர் இல்லத்துல தங்கி இருக்காங்களாம்...'' என்றான் கோபத்துடன்..

''முதியோர் இல்லமா... ஏன் வீட்டை விட்டுட்டு...'' என்றாள், ஆச்சரியத்துடன்..

அப்பார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்து, கால்டாக்சியில் ஏறியதும், ''முடிச்சூர் போப்பா,'' என்று சொன்ன தீபக், மீண்டும், தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். அவர் எடுக்கவில்லை என்றதும், கோபத்தில் அவன் முகம் சூடானது.

''எங்கே போறோம்?'' என்று கேட்டாள் ப்ரீதி. ''அமைதி இல்லம்,'' சொன்னவனின் குரல் அதிர்ந்தது.

காரில் இருந்து இறங்கியவர்களின் கண்களில் பட்டது, 'அமைதி ஹோம்' போர்டு..

மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, இல்லத்தின் உள்ளே சென்றான், தீபக். வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர், ''யார் நீங்க, என்ன வேணும்...'' என்று கேட்டார்.

''ராமச்சந்திரன், மாலதி அம்மாளை பாக்கணும்,'' வியர்வையை துடைத்தபடியே சொன்னான்.
ப்ரீதியும், மகனும் மொபைலை நோண்டியபடி இருந்தனர்.

''நீங்க?''

''அவங்களோட பையன்,'' என்றான் தயக்கத்துடன்..

அவனை உட்கார சொன்னவர், ''சின்ன நிகழ்ச்சி நடக்குது சார்... பெரியவங்களோட நேரம் செலவழிக்கிறதுக்காக, ஒரு கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க, கொஞ்சம் வெய்ட் செய்யுங்க,'' என்று சொல்லி, உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில், மகிழ்ச்சியுடன் அங்கு வந்தனர், தீபக்கின் பெற்றோர்.

வெறுப்பு, கோபம் இரண்டும் சேர்ந்து, அவர்களை வெறித்தவன்,
''என்னப்பா இதெல்லாம்... என்ன நினைச்சுட்டு இங்க வந்தீங்க...'' என்றான்.

''தீபக்...' அம்மாவின் குரல்.

சாப்பிட்ட உடனே மூச்சு வாங்குதுப்பா... இப்ப எல்லாம் ஒண்ணும் முடியல,'' என்றபடி, அவனருகில் அவன் அம்மா அமர, ''அம்மா... முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க என்ன மடத்தனம் இது...'' என்று கர்ஜித்தான்.

அங்கு வந்த தீபக்கின் அப்பாவிடம், ''ஏன் மாமா... உங்களுக்காகத் தானே எல்லா வசதியும் இருக்கிற மாதிரி அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்திருக்கோம். சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு முதியோர் இல்லத்துல வந்து தங்கிட்டீங்களே... உங்க மகன் எவ்வளவு, 'ஷாக்' ஆயிட்டார் தெரியுமா...'' என்றாள், ப்ரீதி.

''என் மானத்த வாங்கணும்ன்னே, இங்க வந்து தங்கி இருக்கீங்க... ரிசப்ஷன்ல இருந்தவர்கிட்ட, நான் அவங்க பையன்னு சொல்றப்ப, எப்படி கூனி, குறுகிப் போயிட்டேன் தெரியுமா...

''உங்களுக்கு அபார்ட்மென்ட்ல வசதி குறைவுன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லன்னு வேற வசதியான ப்ளாட் வாங்கி, அதுல உங்கள ராஜா மாதிரி தங்க வைச்சிருக்க மாட்டேனா...'' என்றவன்,

அம்மாவைப் பார்த்து, ''அப்பா தான் மடத்தனமா ஏதோ சொன்னார்ன்னா உனக்கு மூளை வேணாமா... சே, எதிர் ப்ளாட்டில் குடியிருக்கிற மாமா, 'உனக்கு விஷயமே தெரியாதா'ன்னு கேட்ட போது, அந்த இடத்துல என்னால நிக்கவே முடியல.

''உன் கோபம் புரியுதுப்பா. ஆனா...''

''என்னப்பா ஆனா...'' கோபமாக ஆரம்பித்த வனை, அமைதியாக இருக்கும்படி சைகையினால் கட்டளையிட்டவர்,

''உன்கிட்ட சொல்லாம நாங்க இந்த முடிவ எடுத்திருக்க கூடாது தான்; ஆனா, முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்க... நாங்க இங்க வந்தது, மாற்ற முடியாத முடிவுன்னே சொல்லலாம்,'' என்றதும், அதிர்ச்சியுடன் அப்பாவை பார்த்தான்.

''ஆமாம் தீபக்... உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலன்னு கேட்ட இல்லயா... சொன்னா உனக்கு புரியாது. ஒத்துக்க மாட்டே; தர்க்கம் செய்வே... நீ சொன்னியே, அந்த அபார்ட்மென்ட்டுல எங்களுக்கு என்ன குறைன்னு... வசதியில எந்தவொரு குறையும் இல்ல; ஆனா, எங்களால எதிர் வீட்டுக்காரரைக் கூட சந்தித்துப் பேச முடியிறதில்லங்கிறது தான் பெரிய குறை. மாசத்துக்கு ரெண்டு, மூணு முறை, 'ஹலோ சார்... சவுக்கியமா...' அவ்வளவுதான் பேச்சு;
எதிர் பிளாட்காரர் தான் இப்படின்னா, மத்த ப்ளாட்ல எல்லாம், யார் இருக்காங்கன்னே தெரியாது. நாங்க கூட, சில பேர் கூட பழக முயற்சி செய்தோம். யாரும் ஈடுபாடு காட்டினா தானே... நாள் முழுக்க, நாங்க ரெண்டு பேரும், எங்களுக்குள்ளேயே என்னத்தப்பா பேசிக்கிறது...

'இங்க ஏன் வந்தோம்ன்னு கேட்டியே... இங்க எல்லாரும் எங்க வயசுக்காரங்க; மனம் விட்டு பேசுறோம்... சண்டை சச்சரவுகளும் வரத் தான் செய்யும்; அதுவும் வாழ்க்கைக்கு தேவை தானே... பேசிப்பழக, மனுஷங்க இல்லாதது என்ன வாழ்க்கை... நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட... உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி... வெறும் கட்டடம் மட்டும் வாழ்கையாகிடுமா? ''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு... நீ மறுபடியும் ஊரில் வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்தியமில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம். வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.

''தீபக்... இந்த முடிவை எடுத்ததுல, எனக்கு தான் பெரிய பங்கு இருக்கு,'' என்ற அம்மா, ''இங்கே, எல்லாரும் கிட்டத்தட்ட எங்க வயசுக்காரங்கிறதால சிரிச்சு, பேசி, கலகலன்னு பொழுது போகுது. செங்கல், சிமென்ட், கதவு, ஜன்னல், மாடுலர் கிச்சன், 'ஏசி' இதெல்லாம் மட்டும் வீடு இல்லப்பா, வீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்; இனிமே இது தான் எங்க வீடு"

காட்சி - 2

கண்ணீரோடு நிமிர்ந்த மகன் தீபக் பேச ஆரம்பித்தான் "ஏம்பா... நீங்கள் திருமணத்திற்கு முன்பே நல்ல உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிய அரசு வேலையில் தானே இருந்தீங்க. தாத்தா சொத்தான விவசாய நிலங்கள் வேறு நிறைய இருந்திருக்கு இவ்வளவு பணத்தையும் வைத்துக்கொண்டு பின் ஏன்ப்பா ஒரே பிள்ளை போதும்னு நிறுத்துனீங்க? என்னோடு இன்னும் ஒரிரு குழந்தைகளை பெற்று வளர்த்து படிக்கவைக்க வசதியிருந்தும் தாங்கள் ஏன் செய்யவில்லை? உங்கள் வசதியை வைத்துக்கொண்டு என்னால் இனி அண்ணன், தம்பி, அக்காள் தங்கைகளை பெறமுடியுமா?
யாரும் இல்லாதவனா என்னை நீங்கள் ஆக்கிவிட்டீர்களே அப்பா? தாத்தா வசதி குறைவாயிருந்தும் ஐந்தாறு குழந்தைகளை பெற்று உங்களை எல்லாம் நல்லா வளர்க்கவில்லையா?படிக்கவைக்கவில்லையா?

நீங்கள் எல்லாம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என எப்படி சந்தோஷமா இத்தனை வருஷமும் இருந்தீர்கள். உங்கள் அண்ணன் தம்பி எல்லாம் நிறைய குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா தானேப்பா ஊரில் இருக்காங்க? மற்றவங்க பெரிசா நினைக்கனும்னு என்னையும் ஹாஸ்டல தங்க வைத்து படிக்க வைத்து படிப்பு படிப்பு என்று என் இளமையில் எனக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சந்தோஷமும் இல்லாமல் செய்தீங்களேப்பா. உங்களுக்கு பிறகு எனக்கு யாருப்பா இருக்கா? எனக்கு நல்ல வேலைக் கிடைத்தும் அங்கே போனால் உங்களுக்கு துரோகம் செய்கின்றோமோ என்று என்னை என் மனசாட்சி தினம் தினம் கொல்றது உங்களுக்கு தெரியாதுப்பா. அங்கேயும் வந்து தங்கமாட்டேன்றீங்க.

என் மனைவி, அவள் வீட்டில் அவளும் ஒரே பெண். அவள் அப்பா அம்மாவுக்கும் உங்களை போன்ற நிலைதான். என்னைப் போன்றே அவளும் அவுங்க அப்பா அம்மாவை வயதான காலத்தில் பக்கத்தில் வைத்து பாதுகாக்க முடியவில்லையே என்ற கவலை. இது எல்லாம் எங்கள் தவறாப்பா?

ஒரே பிள்ளையான என்னையும் நல்லா படிச்சாதான் பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கலாம் என, என்னை ஹாஸ்டல்ல தங்கவைக்கும் போது நீங்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்காப்பா?

நீங்க, அம்மா, எவ்வளவு பெரிய வீடு,சித்தப்பா பையன், பெரியப்பா புள்ளைங்கயென அவ்வளவு பேர் இருந்தும், என்ன சின்ன வயதில் இருந்தே ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தப்ப நான் எவ்வளவு கஷ்டபட்டேன் என்பது உங்களுக்கு தெரியாதுப்பா? அப்பயும் இதே போல பெரிய வீட்டில் நீங்களும் அம்மாவும் மட்டும்தானேப்பா இருந்தீங்க?
அப்ப தோனலையாப்பா நம் பிள்ளை நம்மோடு தங்கியிருந்து படிக்கவைக்க வேண்டும் என்று?

நம்ம சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே நம் நிலங்களில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு, படிப்புக்கு ஏத்த ஒரு வேலையையும் அங்கேயே தேடிக்கிட்டு சித்தப்பா பிள்ளை, பெரியப்பா பிள்ளை என நம்ம சொந்த பந்தத்தோட நானும் நிம்மதியா இருந்திருப்பேன்.
நீங்களும் கடைசி காலத்தில் நிம்மதியா இருந்திருக்கலாமேப்பா? நம்ம சித்தப்பா பெரியப்பா பிள்ளை எல்லாம் வசதி குறைவா இருந்தாலும் கூட்டுக் குடும்பமா நிம்மதியாதானப்பா ஊர்ல இருக்காங்க.

என் புள்ளைய நல்லா படிக்கவைத்து அமெரிக்காவில் வேலைக்கு அனுப்ப போறேன்னு நம் சொந்த பந்தத்திலும், ஊர் முழுவதும் நீங்கள் சொல்லிகிட்டு இருந்ததை நான் என் சின்ன வயசுல பல முறை கேட்டதால்தான் நான் உங்கள் எண்ணத்தை நிறைவேத்த வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்து அமெரிக்காவும் போனேன். சென்னையிலும் வீடு வாங்கினேன்.
இப்ப என்னை குறை சொல்றீங்களே... இது சரியாப்பா?

ஊர்ல நாலு பேர் பெருசா நினைக்கனும்னு வாழ ஆரம்பித்ததால் இப்ப நம் சந்தோஷத்தையெல்லாம் இழந்தும் வெளில காட்டிக்க முடியாம இருக்கோமேப்பா. மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை?"

யார் மீது தவறு?

இழிவுபடுத்த வேண்டாம்... விட்டுவிடுங்கள்!!""♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தைபெற்றுக் கொள்கின்றார்களா?பரவாயில்லை விட்டுவிடுங்க...
27/10/2024

இழிவுபடுத்த வேண்டாம்... விட்டுவிடுங்கள்!!""
♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தை
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦ஒரு பெண் பலகாலம் சென்று
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦திருமணம் முடிந்து 5ஆண்டுகள்
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன் கணவனோடு
கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே
தங்கியிருந்து படிக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவரவர் அவர் விரும்பியவாறு
வாழ்ந்து கொள்ளட்டும்..அவர்களுக்கு
வெளியில் சொல்லமுடியாத
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம்
புன்னகையுடன் உரையாடுங்கள்.
முடியாவிட்டால்,மௌனமாக
கடந்துவிடுங்கள்..
அது போதும்..
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..
அவர்களது வாழ்க்கை
அவர்களுக்கானது..
புறம் பேசி அலைவதைவிட,இத்தகைய
மன நிலைஅமையப் பெற்றால்
நாம் உயர்ந்தவர்கள் தானே..!

*அன்பு வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்*.  🙏      தற்போது *தீபாவளி* பண்டிகை வர உள்ளதால் அனைவரும் வீட்டிற்கு தேவையான தரமான கல...
02/11/2023

*அன்பு வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்*. 🙏

தற்போது *தீபாவளி* பண்டிகை வர உள்ளதால் அனைவரும் வீட்டிற்கு தேவையான தரமான கலப்படமற்ற நமது *மரச்செக்கு எண்ணெய்* வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக இருக்க எனது *வாழ்த்துக்கள்*.

நமது மரச்செக்கு எண்ணெய் எப்போதும் , என்றும் *மணம்*, *சுவை*, *தரம்* குறையாமல் விற்பனை செய்து வருகிறோம்.

நமது மரச்செக்கு ஆலையில் முதல் தர எண்ணெய் வித்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தாங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு முறை நமது மரச்செக்கு ஆலையை நேரில் வந்து பார்வையிடலாம்.

🙏 *நன்றி* 🙏

*கடலை எண்ணெய்*
*நல்லெண்ணெய்*
*தேங்காய் எண்ணெய்*
*விளக்கெண்ணெய்*. கிடைக்கும்.

மேலும் தகவல் பெற

*மயில் மரச்செக்கு எண்ணெய்*
*9150418156*
Goggle map : mayil mara chekku oil

Salem

ஒரு தத்துவக் கதை:கடவுள் வந்தார்...!“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக...
21/08/2023

ஒரு தத்துவக் கதை:
கடவுள் வந்தார்...!
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்: “நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படீ.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மனநிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு் கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.. சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம் ஒன்பதில் ஒன்றா..? இல்லை, பத்தாவது மனிதனா..?

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்..

Address

Vaikkalpattari

636003

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:05
Sunday 10:00 - 13:10

Telephone

9150418156

Website

Alerts

Be the first to know and let us send you an email when மயில் மரச்செக்கு எண்ணெய். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மயில் மரச்செக்கு எண்ணெய்.:

  • Want your business to be the top-listed Interior Service?

Share