26/08/2026
Capital Maharaja Group’s Industrial Hub companies S-lon, Kevilton, and PE+ have joined hands with Shakthi FM as part of the Nallur Festival for a 10-day door-to-door community activation from August 26 to September 4.
The initiative will be carried out in two phases. From August 26 to 30, the activation team will conduct home inspections and identify repair and maintenance requirements. From August 31 to September 4, the team will return to the identified homes to address and resolve the identified issues. This initiative is undertaken as a gesture of corporate goodwill and is provided entirely free of charge to the community.
On Day 1, August 26, the activation covered Maniyam Thottam, Colombo Thurai, Temple Road, and Kacheri areas. The team visited 40 homes, with repair and maintenance requirements identified in 16 homes.
The community activation will be followed by the Nallur Festival Stall from September 5 to 9, further strengthening the presence of S-lon, Kevilton, and PE+ at the festival while engaging with and supporting the local community.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தொழில்துறை மைய நிறுவனங்களான S-lon, Kevilton மற்றும் PE+, சக்தி FM உடன் இணைந்து, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 4 வரை 10 நாட்கள் வீட்டிற்கு வீடு செல்லும் சமூக சேவை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளன.
இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். முதலாவது கட்டமாக, ஆகஸ்ட் 26 முதல் 30 வரை, சேவைக் குழுவினர் வீடுகளுக்குச் சென்று சோதனைகளை நடத்தி, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் தேவைகளைக் கண்டறிவர். இரண்டாவது கட்டமாக, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை, குழுவினர் கண்டறியப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் சென்று அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தருவர். பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக இந்தத் திட்டம் முற்றிலும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.
முதல் நாளான ஆகஸ்ட் 26 அன்று, இந்தத் திட்டம் மணியம்தோட்டம், கொழும்புத்துறை, கோவில் வீதி (Temple Road) மற்றும் கச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. குழுவினர் 40 வீடுகளுக்குச் சென்றதோடு, அவற்றில் 16 வீடுகளில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் தேவைகள் கண்டறியப்பட்டன.
இந்தச் சமூக சேவைத் திட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 5 முதல் 9 வரை நல்லூர் திருவிழா வலயத்தில் கண்காட்சிக்கூடம் (Stall) ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இது திருவிழாவில் S-lon, Kevilton மற்றும் PE+ ஆகியவற்றின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும் உதவும்.